புதன், 28 ஜனவரி, 2026

தானத்தில் சிறந்த தானம்

#தானத்தில் சிறந்த தானம்#


ஆக்கம்: கவிஞர் இரா .கலைச்செல்வி 

        -----
தானத்தில் சிறந்த சீர்மிகு தானம் இது .
தன் உறுப்பைத் தந்து உதவுவது.!

மறைந்த பின்னரும் வாழ்வதற்கு - இது
மண்ணுலகில் மக்கள் தந்த வரமிது..!

மனிதம் போற்றும் மாண்பிது - நீ
மரணத்தை வெல்லும் வழி இது..!

முடிந்து போனது வாழ்வென்று - நீ
முடிவை எண்ணிக் கலங்காதே!

காலம் உன்னை அழைத்தாலும் - நீ
கலங்கி நின்று போகாதே..!

விடைபெற்றுப் போகும் வேளையிலும் - நீ
விதையாய் மாற வழியுண்டு..!

உறுப்பைத் தந்து உயிர்வாழு - நீ
உலகை விட்டுப் பிரியாதே..!

இறந்த பின்னும் உன் இதயம் ,
இன்னொரு உயிரில் துடித்திடலாம்.!

உறங்கப் போகும் கண்களை - பிறர்
உலகைப் பார்க்கத் தந்திடலாம்!

உதிரம் தந்து பிறஉயிர் காப்பவர் போல் -
உன் உறுப்பைத் தந்து உயிர் காத்திடலாம்..!

மண்ணுக்குள் மடியும் உடல் உறுப்பினை ,
மனிதன் உயிர் வாழ கொடுத்திடலாம்..!

கண்ணீர் சிந்தும் குடும்பத்தில் - நீ
புன்னகை பூக்கச் செய்திடலாம்!

மரணத்திற்குப் பின்பும் வாழ்வதற்கு- இங்கே 
உன்னத தானம் தானம் உறுப்பு தானமே ..!

வாழும் போதே முடிவெடுப்போம் - நாம்
வள்ளல் ஆகிப் நிலைத்திடுவோம்..!




முற்றும்.




ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்

#ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்# ​ ​            மாலை  அஞ்சு மணி இருக்கும். லலிதா மாமி மாடிப் போர்ஷனிலே ஒரே ஆர்ப்பாட்டம்.. ​         மா...