வெள்ளி, 11 ஏப்ரல், 2025

தென்றலும் புயலுமானவள் பெண்



தென்றலும்  புயலுமானவள் பெண் ..!!



படைப்பு :கவிஞர் இரா.கலைச்செல்வி,


தென்றலாய் மனதை வருடியவள். 

அநீதி கண்டால் புயலாய்  சீறிபாய்வாள்.


அன்பின் ஊற்றாய் அனைவரையும் அரவணைப்பாள்..!!


அநியாயம் நடந்தால் சிங்கமென கர்ஜனை செய்வாள்.


 சாதனைகள் படைப்பதில் அவள் சளைத்தவளும் அல்ல..!!


 சவால்களை சந்திப்பதில் அவள்  தயங்கியவளும் அல்ல..!!


தன் கனவுகளை வென்றெடுப்பதில் உறுதியானவள்..!! 


தன் திறமைகளால் உலகை ஏற்றம் பெற வைப்பவள் ..!!


 தாயாய் பாசத்தை பொழிந்திடுவாள்..!!


தடைகளை உடைத்தும்  உயரே பறந்திடுவாள்..!!


 மனைவியாய் அன்பை பரிமாறிடுவாள்..!!


தோழியாய்  தக்க நேரத்தில் உறுதுணையாக இருப்பாள்..!!

 

அவள் பெண்மையான இதயம் கொண்டவள் தான்..!!


அதே நேரம்  இரும்பைப் போல் வலிமையான மனமும் கொண்டவள்..!!


பெண் என்பவள் வெறும் அழகு சிலை அல்ல..!!


அவள் ஒரு சாதனைப் பெண் ..!.அவள் ஒரு மகாசக்தி..!!


அவள் அறிவின் ஒளி..! அவள் வீட்டின் ஒளி விளக்கு ..!!


அவள் நாட்டின் நம்பிக்கை ..! அவள் தியாகத்தின் திருவுருவம்..!!


தென்றலும் புயலுமாகிய பெண்மையை போற்றுவோம்..!!






 



அன்பை அறுவடை செய்


#அன்பை அறுவடை செய் #


 கவிஞர்  இரா. கலைச் செல்வி 


 


                            *****


அன்பென்னும் உணர்வில்தான் அகிலமே சுழல்கிறது .!!

அனைத்து உயிர்களின் உன்னததேவையே அன்புதான்.!!

அன்புதான்  மனித  வாழ்வின்   ஆதாரத்தேவை..!!

அன்பைவிதைத்து  அன்பையே அறுவடை செய்வோம்..!!


அன்புநிறைந்த  இதயத்தில் ஒழுக்கம் நிலைத்திருக்கும்.!!

அன்பு   குடியிருந்தால்  ஆணவம்  அழிந்துபோகும்..!!

அன்பே  சிவம்என அறிந்திடுங்கள் அனைவரும்..!!

அன்பிற்க்கும்  மூன்றெழுத்து ,சிவமிற்கும் மூன்றெழுத்து..!!


அன்பை  சிறுதுளி விதைத்தால், பெருந்துளியாகும்..!!

அன்பின்வழி  நின்றோரை அகிலமும் போற்றும்..!!

அன்பே அனைத்து உயிரினத்திற்கும்  அருமருந்து..!!

அன்பைவிதைத்து அன்பையே அறுவடை செய்வோம்..!!


அன்பு  உலகையே  மாற்றும் உன்னதசக்தி..!!

அன்பு மனித குலத்தின் உயிர் மூச்சு. !!

அன்பை அன்போடு விதைத்துப் பாருங்கள்..!!

அபரிமிதமான மகிழ்ச்சியும் நிம்மதியும் கிட்டும்..!!



அன்பு கொடுக்கின்கூடும்,  பெற்றால் பெருகும்.!!

ஆயுள் வரை , நிலையில்லா   இவ்வாழ்வில் ,

அன்பை விதைத்து செல்வோம்.உங்கள்சந்ததிகள்.!!

அன்போடு அறுவடை செய்து கொள்வார்கள்..!!


மதத்தின் பெயரால் மோதல்கள் வேண்டாம்..!!

கடவுளின் பெயரால் கலவரங்கள் வேண்டாம்..!!

மனிதனை மனிதன் மதித்து நடத்திட வேண்டும் ..!!

மனிதம் போற்றி அன்பினை அறுவடை செய்வோம்..!!



 ‌
















ருத்ர தாண்டவம்

சிறுகதை   #ருத்ர தாண்டவம் # : படைப்பு:இரா. கலைச்செல்வி                  —-------- (இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் நிலையினை  எடு...