ஞாயிறு, 27 ஜூலை, 2025

ருத்ர தாண்டவம்

சிறுகதை 

 #ருத்ர தாண்டவம் # :

படைப்பு:இரா. கலைச்செல்வி 

                —--------

(இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் நிலையினை  எடுத்துச் சொல்கின்ற கதை)

           “ஏங்க …இன்றைக்கு  எப்படியாவது வாட்ச் வாங்கிறலாம் .எனக்கே வெட்கமா இருக்கு .ஆபீஸ்ல தினம் மத்தவங்க கிட்ட டைம் கேட்க .இந்த பழைய வாட்சில் 20 நிமிடம் லேட்டா போறது.”

       “தினம் உனக்கு இதே வேலையாப் போச்சு .வாட்ச் வாங்கணும். வாட்ச் வாங்கணும்னு .நீயே போய் ஈவினிங் வாங்கிட்டு வந்தா என்ன?. ஏன் என்னைய தொந்தரவு பண்றே.?”

  “இதைப் போனவாரமே சொல்லியிருக்கலாமே. நானும் வரேன் போகலாம்னு சொல்லிட்டு இன்னிக்கி ஏன் இப்படி கத்துறீங்க? .எட்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணத்தப்போ வாங்கியது . இப்பதான் இதை மாத்தணும்னு நினைக்கிறேன் .அதுக்கு கூட… உங்களுக்கு வர முடியாதா.?”

     “சரி சரி விட்டா பேசிட்டே… போவ . இன்னிக்கு சாயங்காலம் பர்மிஷன் போட்டுட்டு நேர என் ஆஃபீஸ்க்கு வந்துரு. அங்கே இருந்து எச்.எம்.டி ஷோரூமுக்கு போகலாம்.”

     ஒரு வழியா புவனாவும்  , பாலுவும் ஷோரூமுக்குள்  நுழைந்தனர். விதவித கைக்கடிகாரங்கள் புவனாவின் கண்ணைப் பறித்தது. ஏங்க…இது எப்படி இருக்கு ?.நல்லா இருக்கா. ?

     “ஏய்…வாட்ச் கட்டிக்க போறது நீ .ஏன் என் உயிரை வாங்குற .எது உனக்கு பிடிக்குதோ அதை எடுத்துட்டு கிளம்பு. அரை மணி நேரமா பார்த்துட்டு இருக்க. இன்னும் செலக்ட் பண்ணல. “

     “நான் தான் கட்டிக்க போறேன். அதுக்காக நல்லா இருக்கா இல்லையா என்று ஒரு வார்த்தை சொல்ல கூடாதா? அப்போ எதுக்கு வந்தீங்க.? “

     பாலுவின் கண்களில் தீப்பொறி. புவனாவிற்கு  மூடு  அவுட்.  எதையோ எடுத்துக்கொண்டு கவுண்டரில் பணம் செலுத்தி விட்டு புறப்பட்டாள். 

    “என்ன திருப்தியா” என்ற பாலுவின்  கேள்விக்கு, “திருப்தி என வேண்டி கிடக்கு. ஏதோ மணி சரியா காட்டினாப்  போதும். “

     இருவரும் நடந்து பஸ் நிலையம் வந்தனர். பஸ்ஸில் ஏறியவுடன் உட்கார இடம் கிடைத்தது. அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டாள் புவனா.. பஸ்ஸில் இடம் கிடைத்து, ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு,  நிமிர்ந்து பஸ்ஸில் உள்ளவர்களை நோட்டமிட்டாள். 

       இரண்டு சீட்டு தள்ளி ஒருவர். எங்கேயோ பார்த்த உணர்வு. யாரது என வெகுநேரம் யோசித்தாள்.  சரியாக நினைவு வரவில்லை. ஆனால் நன்கு தெரிந்த முகம். இறங்குவதற்கு இன்னும் இரண்டு நிறுத்தங்கள் தான் இருந்தன.

        “ஒரு நிமிடம்…” என கணவரிடம் சொல்லிவிட்டு , எழுந்து சென்று அந்த மனிதரை பார்த்து “எக்ஸ்கியூஸ் மீ”என்றாள்.

         சிரித்தாள்  புவனா.

     அந்த முகம் சற்று சுருங்கி, லேசாய் யோசித்து, புன்முறுவல் பூத்து, ரொம்ப ஆச்சரியப்பட்டு, “நீங்க புவனா. அமுதா ஃப்ரெண்ட். ஆம் ஐ  கரெக்ட்.”

     எஸ் .எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. எதிர்பராமல் உங்களை பார்த்தது.  எத்தனை வருஷம் ஆச்சு, உங்களை பார்த்தது.? .எப்படி இருக்கீங்க?. அமுதா எப்படி  இருக்கா?. மேரேஜ்க்கு  அப்புறம் அவளை பார்க்கவே இல்ல. நீங்க எப்படி…இங்கே...?

       இங்கே என் மாமா வீட்டுக்கு வந்தேன்.  ஒரு ஃபங்ஷனுக்காக.

    அப்படியா? . நான் அடுத்த ஸ்டாப் இறங்கிடுவேன்.என்னோட வீட்டு அட்ரஸ்  இது. ஒரு நாள் வாங்க எங்க வீட்டுக்கு. ஊருக்கு போறதுக்கு முன்னாடி. 

     நான் உங்கள பத்தி  என் கணவர் கிட்ட சொல்லி வைக்கிறேன். அதோ அந்த  கிரீன்  சர்ட்.  அவுங்க  தான். 

  ஓகே என கூறியபடி ,அவளின் கணவரை பார்த்து சிரித்து, கை அசைத்தான். அவருக்கு எதுவும் புரியவில்லை.

      அவரு   என் காலேஜ் ஃப்ரெண்ட் அமுதாவோட  அண்ணன்... எங்கே பார்த்த மாதிரி இருக்கேன்னு போனேன். அமுதா அண்ணனே தான். காலேஜ் படிக்கிற போது அவவீட்டுக்கு அடிக்கடி போவோம் பிரெண்ட்ஸ் எல்லாரும். அமுதாவும் மேரேஜ் ஆகி போயிட்டாளா. அவ அட்ரஸ் கூட இப்ப தெரியாது.   இங்கே ஏதோ ஃபங்ஷனுக்கு வந்தாராம். அதனால நம்ம வீட்டு அட்ரஸ் கொடுத்து இருக்கேன். முடிஞ்சா  வீட்டுக்கு வந்துட்டு போங்கன்னு சொல்லி இருக்கேன்.

     பஸ்சை விட்டு இறங்கி, வீட்டுக்கு வரும் வழியில்,  ஏண்டி அவனை வீட்டுக்கு வரச் சொன்னே. ?.

     சும்மாதான். என்ன இப்போ?  ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்திருக்கேன் .பஸ்ல என்னத்த பேசுவது?  அமுதாவும்  எப்படி இருக்கான்னு ஒன்னும் தெரியல .பார்த்ததால பார்மாலிட்டி வரச் சொன்னேன். 

       இல்லை ..எதுக்கு தேவையில்லாம…  வீட்டுக்கு வந்துகிட்டு. 

    ரொம்ப அலட்டிக்காதிங்க. அவர்  வந்தாலும் தான் வருவார். எதுக்கு இத போய் பெருசா பேசிட்டு. உங்களுக்கு தெரிஞ்சவங்க மட்டும் தான் வீட்டுக்கு வரணுமா? எனக்கு தெரிஞ்சவங்க வரக்கூடாதா?

     ஏய்.. நான் அப்படியா சொன்னேன்.? 

     வேற என்ன? ஏதாவது செலவு ஆகும்னா. வந்தா ஒரு கப் காபி கொடுப்பேன். வேறு ஒன்றும் கொடுக்க மாட்டேன். போதுமா? கவலைய விடுங்க. 

      வீடு வந்து இரவு வேலை முடித்து, தூங்கி, காலை மணி ஐந்திற்கு எழுந்து பம்பரமானாள் புவனா.  சமைத்து, கிச்சன் கிளின் செய்து, எல்லாருக்கும் லஞ்ச் பேக் பண்ணி,  தானும் ரெடியாகி ஒன்பது மணிக்கு பஸ் பிடித்து ஆபீஸ் போனாள். குழந்தைகள் பள்ளி சென்றனர். மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய போது,  வீட்டுக்குள் யாரோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது. யாராயிருக்கும் என்று ஆச்சரியத்துடன் நுழைந்தாள் புவனா.. 

      வந்திருப்பது அமுதாவின் அண்ணன்  என்பது தெரிந்து கொஞ்சம் ஆச்சரியப்பட்டாள்.பரவாயில்லையே நான் சொன்னதை பொருட்படுத்தி வந்திருக்காரே. 

     “ஹலோ வாங்க.  வந்து  ரொம்ப நேரம் ஆச்சா.?”

    சொல்லிவிட்டு கணவரை பார்த்தாள் புவனா. அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை. 

     “அம்மா அப்பா எப்படி இருக்காங்க? அமுதா  எப்படி இருக்கா.?  எங்க இருக்கா?    அவ அட்ரஸ்சே தெரியாது.” 

      “சேலத்துல இருக்கா . உங்க அட்ரஸ்சை அவளிடம் கொடுக்கிறேன்.”

      “சரி பேசிட்டு  இருங்க. காபி கொண்டு வரேன்.” உள்ளே போனாள்.

     காபி குடித்துக் கொண்டே,  உங்களை எதிர்பார்க்காமல் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.  அமுதாவிடம் சொல்கிறேன்.  அவளை உங்களுக்கு லெட்டர் போடச் சொல்கிறேன். இதுதான் அவ அட்ரஸ் .நீங்களும் லெட்டர்  போடுங்க.  கணவரிடம் கைகுலுக்கி  எழுந்தார்.( அது கைபேசி வருவதற்கு முந்தைய காலம்)

    நீ லெட்டர் போடு. அவளும் லெட்டர் போடுவா.  எதுக்கு இந்த தேவையில்லாத உறவு எல்லாம்.  பெரிய ஃப்ரெண்ட்ஷிப். ஒரு கனல் பார்வையை வீசிவிட்டு ,போய் படுத்துக் கொண்டார் புவனாவின் கணவன். 

       புவனா இரவு வேலைகளை முடித்து, குழந்தைகளை படிக்க வைத்து, சாப்பிட வைத்து விட்டு,  இவரை சாப்பிட அழைத்தாள். 

       எனக்கு வேண்டாம். ஒரே  தலைவலி!!

     தலைவலி  தலையிலா?  மனதிலா?  வலி இருக்கட்டும் .வாங்க சாப்பிட. 

     வேண்டாம்ன்னு ஒரு தடவை சொன்னா புரியாதா. ?

     இந்தா பாருங்க…சமைச்சதெல்லாம் வேஸ்ட்டா போயிடும். வாங்க. 

   அப்போ வேஸ்ட்டா போயிரும்  என்றுதான்  என்னை சாப்பிட கூப்பிடுறியா?  ஏன் இப்ப வந்துட்டு போனானே தடியேன், அவனுக்கு சோறு போட்டு விருந்து வைத்து அனுப்பி இருக்க வேண்டியதுதானே? இவளுக்கு தெரியும் இவர் சாப்பிட வராததற்கு என்ன காரணம் என்று. எரிச்சலுடன் இருந்த புவனாவிற்கு கணவன் முனகியது இன்னும் ஆத்திரத்தை கிளப்பியது…

     சும்மா பஸ்ல போனவனை கூப்பிட்டு, பேசி சிரிச்சு, வீட்டுக்கு வரச் சொல்லி, எதுக்கு இதெல்லாம்?  யாரோ போறான். எதுக்கு தேவையில்லாத இந்த உறவெல்லாம். இப்படி கண்டவனை வீட்டிற்கு கூப்பிடுற வேலையெல்லாம் உன் அப்பன் வீட்டோட விட்டுட்டு வந்து இருக்கணும். இங்க கண்டவனும் வருவதை நான் அலோ பண்ண மாட்டேன். குடும்பப் பெண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கிறதை விட்டுட்டு பெத்து வளர்த்திருக்கான் பாரு. பொட்டச்சிய எவ்வளவு லட்சணமா.?

      இந்தா பாருங்க, எங்க அப்பாவை பத்தி, ஏதாவது சொன்னீங்க எனக்கு கெட்ட கோபம் வரும். 

    என்னடி கோவம் வரும்.. என்ன கோவம் வரும் ? உன் கோபம் என்னைய என்ன செய்யும் . அப்பனை பற்றி சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வருதோ. தெரியாது உங்க அப்பன பத்தி. உங்க குடும்பத்தை பத்தி .எல்லாம் மறந்துட்டேன்னு நினைச்சிட்டியா ? 

     விஷயம் எங்கோ திரும்புவதை உணர்த்தாள் புவனா.  எனினும் கேட்டாள் என்ன சொல்ல வர்றீங்க..?

        கல்யாண வீட்டிலேயே தெரிஞ்சுக்கிட்டேனே உங்க குடும்பத்தை பத்தி. கல்யாண வீட்டுல பார்த்தா ஒரே பசங்க கூட்டம் .யாருனு விசாரிச்சா புவனாவோட  காலேஜ்ல படிச்ச பசங்கன்னு ரொம்பவும் சாதாரணமா சொல்லிட்டு போறான் உங்க அப்பா. எந்த அப்பனாவது இப்படி காலேஜ் பசங்களை எல்லாம் இப்படி பொண்ணோட கல்யாணத்துக்கு அழைப்பானா ? நீ தான் அவங்களை அழைத்து இருந்தாலும் உங்க அப்பா பெர்மிஷன் கொடுத்திருக்கானே. இது போதாது உன் குடும்ப இலட்சணத்தை காட்டுறதுக்கு. 

        புவனாவிற்கு ஆத்திரம்  ஆத்திரமாய் வந்தது.  மணி இரவு ஒன்பது மணி. இந்த நேரத்துல இவனோட என்ன வாக்குவாதம் பண்ணறது.?

   இப்ப பாரு… இவன் வீட்டுக்கு வந்தாலும் தான் வருவான்னு சொன்னாய்.. வந்துட்டான்.  இன்னொரு தடவை மாமா வீட்டுக்கு வரும்போது வருவான். இது தேவையா.?

     என்னவோ சொன்னேன் வந்துட்டேன். என்ன இப்போ குடி முழுகி போச்சு? போன வருஷம் உங்களோட காலேஜ்ல படிச்சவள்ன்னு  சொல்லிட்டு எவளோ வந்து ரெண்டு மணி நேரம் கதை அளந்துட்டு போகல. ஏன் வந்தா அவ.? சும்மா தானே வந்தா .நான் ஏதாவது கேட்டேனா உங்கள.? ஆனால் இந்த ஆம்பளைங்களுக்கு மட்டும் ஏன் இப்படி  புத்தி போகுதோ.!!

      ஆம்பளை புத்தி எப்படியும் இருக்கட்டும் .பொம்பள புத்தி ஒழுங்கா இருந்தா தான் வீடு உருப்படும்.

          இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படி குதிக்கிறீங்க?

      இப்ப பண்றது அப்போ பண்ணியது எல்லாம் சேர்த்து தான் கோபம் வருது. அன்றைக்கு என்னடானா,   உன் ஆபீஸ்ல எவளுக்குகோ  கல்யாணம்ன்னு 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அவள் ஊருக்கு போகணும் என  ஒத்த கால்ல நிக்கிற நீ .எங்கே எவளுக்கு கல்யாணம்,  எவனுக்கு கருமாதி எல்லாம் உனக்கு நினைவிருக்கும் .வீட்ல எந்த பொருள் எங்கே வச்சோம்னு நினைவிருக்காது. பொம்பளைக்கு முழு கவனமும் புருஷன் மேலையும், புள்ள மேலையும் ,வீட்டு மேலயும் தாண்டி இருக்கணும். 

        எதுக்கு இப்போ சம்பந்தமில்லாத விஷயங்களை இழுக்குறிங்க. ச்சீ.. வீடா இது.  நீண்டா குற்றம், உக்காந்தா  குற்றம் என்கிற  கதையாவுல  இருக்கு.

     ஆமாண்டி நிண்ட  குத்தம், உட்கார்ந்த குத்தம் தாண்டி. எல்லாத்துலயும் பொம்பளையா நடந்துக்க .நிக்கிறதுலயும் ஒரு பணிவு வேண்டும். உட்கார்வதிலும் ஒரு அடக்கம் வேணும். நானும் தான் எம். ஏ படிச்சிருக்கோம். சம்பாதிக்கிறோம் என்கிற  திமிரு உனக்கு. அதுதான் இப்படி பேச வைக்குது. வேற என்ன.? 

      இதற்கு மேல் எந்தவிதமான பேச்சையும் கேட்கிற சக்தி புவனாவிற்கு  இல்லை . பேச பேச வார்த்தை பரிமாற்றங்கள் நீண்டு கொண்டு தானே போகிறது. ராத்திரி நேரத்தில பக்கத்து வீட்டுக்கெல்லாம் கேட்க போகுது..ச் சே…”இப்போ சாப்பிட வர்ரீங்களா இல்லையா?” புவனாவின்  இந்த கேள்விக்கு “எல்லாத்தையும் எடுத்து குப்பையில கொட்டு” என பதில் வந்தது .

   பெருமூச்சுடன் சோபாவில் அமர்ந்தாள் புவனா. மணி இரவு 10. குழந்தைகள் அயர்ந்து தூங்கினர். பக்கத்து வீட்டில் எட்டு மாத பெண் குழந்தை அழுது ஓய்ந்தது .சில தொலைக்காட்சி  ஒளிபரப்பு ஓசை தவிர , நல்ல நிசப்தம் . புவனாவின்  மனது பலத்த சிந்தனையில் மூழ்கி விட்டது. 

     ஏன் இவர் இப்படி.?  சிலபேர் இப்படித்தான். இவர்களுக்கு தன்  மனைவி  இப்படித் தான்  இருக்கணும் என்ற ஆணவம். ? பெண்களுக்கென்று  தனித்தன்மை, தனி சிந்தனை, தனி விருப்பம் இருக்கக் கூடாதா ?கணவர் சொல்வதற்கு  ,தஞ்சாவூர் பொம்மையா தலையாட்டனுமா? கணவருக்கு அடங்கி, ஒடுங்கி,  இருக்க வேண்டுமா?  அப்போதுதான் குடும்பம் அமைதியா ,சந்தோசமா இருக்குமா ? சில ஆண்கள் மனது அப்போதுதான் அமைதி பெறுமா. ?

     அப்போ நான் உயிருள்ள மனுஷியா இருக்கக் கூடாது. உயிரற்ற ஜடமா இல்ல இருக்கணும். ஜடமான  பொண்ணைத்தான் பல ஆண்கள் விரும்புகிறார்களோ.? .ஆண்களை விட பெண்கள் எந்த வகையில் குறைச்சல். உடல் ரீதியாக அவர்களுக்கு பலம் இருக்கு என்கிற ஒரே ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு ,இப்படி ருத்ர தாண்டவம் ஆடுகிறார்களே. நமக்கு உள்ள மனித உணர்வுகள் தானே அவளுக்கும் இருக்கும் என்பதை ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்ப்பார்களா? 

      அந்தக் காலத்தில்  பெண்கள் வீட்டோடு இருந்தார்கள். கணவருக்கு எல்லாம் பார்த்து பார்த்து கவனிச்சாங்க. கணவனை ஏன் எதற்கு என்று ஒன்றும் கேட்க மாட்டார்கள்.அதனால ஆண்கள் தன் இஷ்டப்படி ருத்ர தாண்டவம் ஆடினர் .இப்போ பெண்கள் படிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்சு உலக விஷயங்கள் எல்லாம் அவர்களுக்கும்  தெரிய ஆரம்பித்துவிட்டது .மனரீதியா ஆண்களை விட பெண்கள் உறுதியாக இருக்காங்க .இப்போதுதான் உயிருள்ள மனுஷியாய் மாற ஆரம்பித்து உள்ளார்கள் .ஆனால் இந்த ஆண்கள் இப்போதும் அந்தக் காலத்து வீட்டுப் பெண்களைப் போல , தனக்கு அடக்கி போகும் தன்மையான பெண்களையே விரும்புகிறார்களே.  ஆண்கள் இரத்தத்தில் ஊறிப்போன சுயநலம்.  ம்…இது எந்த வகையில் நியாயம்? 

   பாரதி படைத்த புதுமைப் பெண்ணைப் போல தன் மனைவி இருக்கணும் என  எத்தனை ஆண்கள் ஆசைப்படுகிறார்கள்?  ஆனால் பாரதியாரைப் பற்றி மணிக்கணக்கில் புகழ்ந்து பேசுவார்கள்.  மனைவியும் தன்னைப்போல் வேலைக்கு செல்லும் நிலையில் , வீட்டு வேலைகளை ஓரளவாவது பகிர்ந்து கொள்ளும் ஆண்கள் எத்தனை பேர்? எப்போது இவர்கள் மனைவியை புரிந்து கொண்டு , தான் என்ற ஆளுமை உணர்வைத் தவிர்த்து, அவர்களுக்கு நல்ல நண்பர்களாய் மாறுவார்களோ அப்போதுதான் குடும்பம் குதுகூலமாகும்.

  ஆம்..இந்த இருபதாம் நூற்றாண்டில்.. பெண்கள் புள்ளைய கவனிக்கணும் .புருஷனை கவனிக்கணும். வீட்டை கவனிக்கணும். வீட்டுக்காரருக்கு சமமா சம்பாதிக்கணும் .அவருக்கு அடங்கியும் போகணும். 

    இந்த நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்? சொல்ல முடியாது நாட்டை  ஆளுகின்ற பொறுப்பும் இப்பவே பெண்கள் கைக்கு வந்தாச்சு.. இனி பெண்கள் எல்லாம் தன்னால்தான் முடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வுடன், பெண் சிங்கங்களாய், பிரியதர்ஷினிகளாய்  வீறுநடை போடலாம். ஆண்கள் ஆடிய ருத்ர தாண்டவத்தின் விளைவு இதுவாக இருக்கலாம்.

     இப்படியாக ஏதேதோ புவனாவின் மனதில் ஆயிரக்கணக்கான எண்ண அலைகள் வந்து மோதி , எதற்கும் பதில் கிடைக்காமல்,  அசதியில் கண்ணயர்ந்து விட்டாள்.

       ஆழ்ந்த தூக்கத்தில் புவனா….  இது என்ன இப்படி.? நிஜமா? எங்கும் மகிழ்வான  பெண்கள். மகிழ்வான குடும்பம் .நிமிர்ந்த நன்நடை, நேர்கொண்ட பார்வை ,நிமிர்ந்த ஞானச் செருக்கு கொண்ட பெண்கள்.  பெண்களை  நிஜமாய் புரிந்து கொண்ட கணவன்மார்கள்.    பெண்ணை தனக்கு சமமாய் பாவிக்கும் ஆண்கள். உண்மையான நேசம் . என்ன இது எப்படி.?  சொர்க்கமாய் தெரிகிறதே.

     தூக்கத்தில் திடீரென்று எழுந்த புவனா, ச்சே   இது கனவா?  என பெருமூச்சு விட்டாள்.  ஆம் இந்த கனவு நனவாகும் நாள் நிச்சயம் வெகு தொலைவில் இல்லை என்ற உறுதியுடன் மீண்டும் தூங்கிப் போனாள் புவனா..

படைப்பு: இரா. கலைச்செல்வி **

செவ்வாய், 8 ஜூலை, 2025

காதலின் மறுபக்கம்

சிறுகதை:

காதலின் மறுபக்கம் 

ஆக்கம் : இரா. கலைச்செல்வி

                  __________

(அந்த ஊர் பெரிய நகரமும் இல்லை .கிராமமும் இல்லை. இடைப்பட்ட ஒரு சிறு நகரம். செல்போன் வருவதற்கு முந்தைய காலம். ஆங்காங்கே எஸ் .டி .டி. பூத்துகள் மட்டும். )

         அன்று அந்த ஊரின்  நேரு தெரு முழுவதும், ஒரே பதட்டமாய் இருந்தது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு  அக்கா. எப்படியாவது உயிர்  பிழைக்கனும் அந்த பொண்ணு.  ரொம்ப நல்ல பொண்ணு. குனிந்த தலை நிமிராம   காலேஜுக்கு போய் வரும்.   ஏன் இப்படி பண்ணுச்சுனே தெரியல. ?

பிழைக்கிறது  ரொம்ப கஷ்டம்னு சொல்லிக்கிறாங்களே .  இல்ல ... சரசு அக்கா  உசுரு  இருந்துச்சு . நான் பார்த்தேன். மகமாயி எப்படியாவது காப்பாத்தி கொடுத்திடனும்.

இந்து ...பிரியாவுக்கு போன் செய்தாள். பிரியா இன்னைக்கு காலேஜ்க்கு போகவேண்டாம். நீ அப்படியே பு,றப்பட்டு ஜி.ஹெச்..க்கு வந்துடு... விஷயம் தெரியுமா. ?

என்ன விஷயம் இந்து? எனக்கு ஒன்னும் தெரியாதே. !

ரொம்ப சோகமான விஷயம் நடந்துருச்சு பிரியா. நம்ம திலகா... நம்மள விட்டு போயிருவாளோன்னு  தோணுது .

ஏய் ... என்னடி சொல்ற ..எனக்கு ஒன்னும் புரியல.

ஆமா பிரியா . திலகா சூசைடு அட்டென்ட் பண்ணிட்டா. கடைசி நேரத்தில் அவ  அண்ணி பார்த்துட்டு ,காப்பாத்தி இருக்காங்க. உயிர் லேசா இருக்குன்னு சொல்றாங்க. ஜி.ஹெச் க்கு கொண்டு போய் இருக்காங்க .உடனே வா.. நம்ம ஜி.ஹெச்க்கு போகணும்.

"அய்யய்யோ... ஏண்டி...  இவ இப்படி பண்ணினா ..அடிப்பாவி."

"சரி . நீ கிளம்பி  வந்து ஜி.ஹெச்  வாசலில் நில்லு. நானும் வந்துடறேன் .‌ அங்கே பேசிக்கலாம்."

இந்துவும் பிரியாவும் சந்தித்து ,  திலகாவை பார்க்க சென்றனர்.

ஏதேதோ வாயிலும், மூக்கிலும் பொருத்தப்பட்டு ,குழாய்களும் பாட்டில்களுமாய் , அசைவின்றி திலகா கிடந்தாள். அவளின் அண்ணி பக்கத்தில்.

இந்துவும் பிரியாவும் அறைக்கு வெளியே நிற்பதை கவனித்து, திலகாவின் அண்ணி, வெளியே வந்தாள்..

என்ன அண்ணி... எப்படி நடந்துச்சு.?  எங்களால்  ஜீரணிக்கவே முடியல . டாக்டர் என்ன சொல்றாங்க..?

     கலங்கிய கண்களோடு, திலகாவின் அண்ணி  , நடந்தவைகளை விவரித்தாள். குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருந்தேன். திடீர்னு ஒரு சத்தம் திலகா ரூம்ல இருந்து. அதோட அவளோட வித்தியாசமான குரலும் கேட்டது . எனக்கு பதறிருச்சு .‌ அப்படியே குழந்தையை தூக்கிட்டு,  திலகா ரூமிற்குள் போனேன் .ஒரு கணம் என்ன செய்வது என்றே தெரியவில்லை .அவள் தூக்கில் தொங்கிட்டு  இருந்தா . கால் உதறி கொண்டு இருந்தது .அப்படியே குழந்தையை கீழே போட்டுட்டு,  அவளை தாங்கி பிடிச்சேன் .வீட்ல யாருமே இல்ல. ரொம்ப நேரமா கத்தி... கத்தி... யாரும் வரவே இல்லை. என்ன செய்றதுன்னே தெரியல. விட்டா அவளோட உயிர் போய்விடும்.  10 நிமிஷம்  பிடித்துக்  கொண்டு நின்றேன்.   என்னால நிற்க  முடியல. என்னோட பலம் கொண்ட மட்டும் கத்தினேன் . அவ அண்ணனும் வீட்டில இல்ல. ரோட்டுல போனவங்க  என்னோட சத்தத்தை  கேட்டு ,வீட்டுக்குள்ள வந்தாங்க . அப்புறம்  என்னோட அலறல் சத்தத்தை கேட்டு ரூம் குள்ளே வந்து பார்த்து , வந்தவர் தான் ...பெரிய ஸ்டூல் எடுத்து போட்டு, அந்த கயிற்றை அறுத்து ,அவளை கீழே கிடக்கினார்.

     உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி ,ஆம்புலன்ஸ் வந்து, கால் மணி நேரத்துல இங்க ஜி.ஹெச்க்கு வந்துட்டோம். அவ அண்ணனுக்கும் செய்தி போய்‌ அவரும் வந்துட்டாரு. டாக்டர் பிழைக்கிறது கஷ்டம்னு சொல்றாங்க.  குரல்வளை நல்லா நசுங்கிருச்சாம்.. இருந்தாலும் உயிர் இருக்கு .நாங்க முயற்சி பண்றோம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.

     உங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல அண்ணி. கடவுள் தான் காப்பாத்தணும்.  எப்படியும் பிழைச்சுடுவா . கவலைப்படாதீங்க அண்ணி. அவளோட நல்ல மனசுக்கு எதுவும் நடக்காது. நாங்க  நாளைக்கு வர்றோம்.

     சரி இந்து . திலகா என்னிடம் நாத்தனார் மாதிரியே பழக மாட்டா. சொந்த தங்கச்சி மாதிரி தான்  பழகுவா. எப்படியும்  பிழைத்து வந்துடனும். கண் கலங்கினார் அண்ணி.

     இருவரும் மௌனமாய் விடை பெற்று ,வீடு வந்து சேர்ந்தனர். இருவர் மனதிற்குள்ளும்  ஆயிரம் நினைவுகள்.

     எல்லாமே  அவ அண்ணனால் தான் . அவன் ஒரு முரடன்.‌ திலகா ...அவன் பிரண்டு சுந்தரை காதலிக்கிறாள்ன்னு தெரிஞ்ச உடனே, ‌ வீட்ல தினம்  ரகளை தானாம். நிம்மதியே இல்லைன்னு சொல்லி... திலகா அப்படி கண் கலங்கினாள். இது  பிரியாவின் மனசு.

       ஏன் இவ இப்படி பண்ணுனா.? பெரிய காதல். மண்ணாங்கட்டி காதல். காதலிச்சு கல்யாணம் பண்ணவங்கெல்லாம் இப்ப எப்படி வாழ்றாங்கன்னு இவளுக்கு தெரியாதா என்ன? கல்யாணம்  வரைக்கும் தான் காதல். கல்யாணம் முடிந்த பிறகு நான் ஆம்பளைன்னு காட்ட ஆரம்பிச்சுடுவாங்க. குடும்பம் ,குழந்தை, ஈகோ அப்படின்னு பிரச்சனை மேல்  பிரச்சனை தான் . காதல் என்பது கானல் நீர் மாதிரி. இதுக்கு எதுக்கு பைத்தியக்காரத்தனமா இவ உயிரை போக்கிக்கணும். பிழைத்து  வரட்டும். அப்புறம் பேசுகிறேன்.  இது இந்துவின் மனசு.

அன்று திலகா சொன்னது பிரியாவின் நினைவில் இன்று.

     என்னவோ பிரியா... அவன் பாக்குற அந்த  பார்வை  என்னைய என்னவோ பண்ணுது.  இதுவரை அவன் கிட்ட நான் எதுவும் பேசியதே கிடையாது.  அவன் வீட்டுக்கு வந்தா.. எங்க அண்ணன் என்னைப் பார்த்து ஒரு முறை முறைப்பான். நான் ரூம்குள்ள போயிடுவேன். எப்பவாவது ஏதேச்சையாக அவனைப்  பார்க்க நேர்ந்தால் அவன் ஒரு சிரிப்பு சிரிப்பான். நாள் பூராம் அந்த சிரிப்பையே நெனச்சுக்கிட்டு இருப்பேன்.  இதுவரை சௌக்கியமா ?... வரேன் ...  கொஞ்சம் தண்ணி கொடுங்க ...என மூன்று வார்த்தை தான் பேசி இருக்கான். கண்ணால பல விஷயங்கள் பேசி இருக்கான். இது ஒரு தனி பீலிங்கா இருக்கு ப்ரியா.

     இவளோட அண்ணன் , சுந்தரோடு  இவளை சாதாரணமா பேச அனுமதிச்சிருந்தா கூட காதல் வந்திருக்காது.  அவள் இந்த அளவிற்கு போய் இருக்க மாட்டாள். எப்பவுமே முறைச்சு முறைச்சு அவளை கண்ட்ரோல் பண்ணி தான், இவள் மனசு இப்படி ஆயிடுச்சு.. பிரியா பெருமூச்சு விட்டாள்.

     அவளோட அண்ணன் அந்த பக்கம் இந்த பக்கம் போகும்போது , கண்ணால பார்த்து பேசியது தான்.   அப்பாவும்  இல்ல. அம்மாவும் இல்ல. அண்ணன் மட்டும் தான் . அவனும் அன்பா பேசுவது கிடையாது . அந்த பாசத்துக்கான தவிப்பு  சுந்தர் பார்வை பட்டதும் உருகி விட்டது.  மனசுக்குள்ளே வச்சு வச்சு ,அழுத்தி அழுத்தி, அழுது  செத்து இருக்கா. திலகா பக்கம் உள்ள நியாயத்தை பிரியா உணர்ந்திருந்தாள்.

      ஒரு நாள் எப்படியோ அவனோடு பேச சந்தர்ப்பம் கிடைக்கும் போது,  ஐ லவ் யூ என சுந்தர் சொல்லி விட்டானாம்.  இவளும் சிரித்துக்  கொண்டே பதில் ஏதும் சொல்லாமல் உள்ளே வந்து விட்டாளாம்.

     இந்த விஷயம் அவள் அண்ணாவுக்கு தெரிந்ததோ,  இல்லையோ அன்றிலிருந்து இவள் காலேஜ் போவதை நிறுத்தி விட்டான் . சுந்தர்  தனது வீட்டுக்கு வருவதையும் நிறுத்தி விட்டான் .வீடு ஜெயில் மாதிரி ஆகிவிட்டது என திலகா புலம்பியது ,  நேற்று பேசியது போல உள்ளது.

   காலேஜுக்கும் போக முடியல . அவனையும் பார்க்க முடியல. ரூம்குள்ளேயே இருந்து இருந்து அவளுக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆயிடுச்சாம். .  நான் அப்பப்போ போய் அவளிடம் பேசிட்டு வருவேன் .என்ன செய்வது என்றே புரியவில்லை என சொல்லி  அழுதா திலகா.

     இரண்டு நாள் கழித்து ஜி .ஹெச் க்கு சென்ற போது,  அவள் அண்ணி முகத்தில் சற்று மகிழ்ச்சி .என்ன அண்ணி டாக்டர் என்ன சொன்னாங்க.? உயிர் பிழைக்க 75% சான்ஸ் இருக்குன்னு சொல்றாங்க. இருவருக்கும் மனதிற்குள் சந்தோஷம்.

     ஒரு வாரத்திற்கு பிறகு திலகா உயிர் பிழைத்து விட்டதாக தகவல்... இன்னும் ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டிற்கு செல்லலாம் என கூறி விட்டார்களாம்.

    இரண்டு தடவை இந்துவும் ,பிரியாவும் போய் திலகாவை பார்த்துவிட்டு திரும்பினர். அவளால் எதுவும் பேச முடியவில்லை. தொண்டைக் குழாய் நசுங்கி விட்டதால்.  தோழிகள் கண்களால் மட்டுமே பேசிக்கொண்டனர்.  அவள் காதலைப் போலவே.

     அடுத்த வாரம் டிஸ்சார்ஜ் ஆகி திலகா  வீட்டிற்கு வந்தாயிற்று . அவள் அண்ணன் அவளைப் பார்த்து முறைத்ததோடு சரி. அண்ணி தான் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தாள். ஒரு மாதத்தில் பழைய திலகாவாய் மாறிவிட்டாள். 

இன்று திலகாவும், இந்துவும் தனியாய் பேசிக் கொள்கின்ற வாய்ப்பு .

     "திலகா... நான் உனக்கு எவ்வளவு சொல்லி இருக்கேன் . அப்படி இருந்தும் நீ இப்படி பண்ணிட்டியே. எல்லாருக்கும் எவ்வளவு வேதனை..!!. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னா தற்கொலை தான் தீர்வா.? எத்தனை பேர்… காதலிச்சு கல்யாணம் செய்து கொண்டவர்கள்  கொஞ்ச நாள்ல பிரிஞ்சு போறாங்க உலகத்துல . நீ பார்த்துகிட்டு தானே இருக்க. லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க எல்லாம் சந்தோஷமா இருக்காங்களா? சில பேர்  தான் கடைசிவரை காதலோடு வாழ்கிறார்கள்"

"தெரியும் இந்து.  ஆனால்  முடியல . அந்த  வலியை என்  மனசால தாங்க முடியல."

     கல்யாணம் வரைக்கும் தான் காதல் . கல்யாணம் ஆச்சு அவ்வளவுதான். இது சினிமா  இல்லை. குடும்பம், குழந்தை, கடமை அப்படி.. போய்க்கிட்டே இருக்கும். அதுக்கு நடுவுல எத்தனையோ  சண்டை ,  நீ பேசுற விதம் அவனுக்கு பிடிக்காது . அவன் பேசுற விதம் உனக்கு பிடிக்காது . இன்னும் எத்தனையோ .  பெரும்பாலும் அடிமாட்டு  வாழ்க்கை தான்.‌ போரடிக்க ஆரம்பிச்சிரும். இப்போ அவன் சிரிப்பை பாத்து உனக்கு வருகிற  ஃபீலிங் அப்புறம் வராது . நீயா ஏதாவது கற்பனை பண்ணி, இப்ப அதுல சந்தோஷப்பட்டு இருப்பாய்.. அதுதான் உண்மை. உங்க அண்ணன் அண்ணி  எப்படி இருக்காங்க .அது மாதிரி தான் இருக்கும் வாழ்க்கை.  கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்.  அவ்வளவுதான்."

     "இதுக்காக போய்...  இருபது  வருடமா  வளர்த்த  இந்த உடலை, உன்  உயிரை மாய்த்துக்கொள்ள போயிட்டியே. உன்னை இவ்வளவு தூரம் வளர்க்க , உங்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க.   பிளஸ் டூ..வில்  90%  மார்க் வாங்க நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாய். எல்லா உழைப்பையும் மறந்துட்டு இப்படி உலகை விட்டுப் போய் சேர முடிவெடுத்து விட்டாயே.இதையெல்லாம் பார்க்க கூடாதுன்னு  தான் உங்க அம்மா முன்னாடியே போய் சேர்ந்துட்டாஙக."

    "நீ சொல்ற எல்லாமே என் மனசுல வந்து போச்சு இந்து.. ஆனா இங்க வீடே நரகமாய் இருக்கே. தினம் தினம் சாவதற்கு ஒரேடியா சாகலாம்னு தான். "

     "சரி  திலகா.இப்ப  ஒன்னும் இல்ல. நான் உங்க அண்ணாவிடம் பேசி உன்னைய காலேஜுக்கு அனுப்ப சொல்றேன். கொஞ்ச நாள் அமைதியா இரு . உங்க அண்ணன் மனசும்  மாறலாம் . இல்லாட்டினாலும் ஒன்னும்  குடி முழுகாது.. அவனை  பிரண்டாய் நினனச்சு மனசை தேத்திக்கோ.   தப்பு இல்ல. அவன் தான் வாழ்க்கை என்று நீ முடிவு செய்து விடாதே. . அதெல்லாம் சும்மா பைத்தியக்காரத்தனம். இப்ப  பிடிச்சிருக்கும். ஆனா இந்த காதல் பிடிப்பு ...கடைசி வரை இருக்கும் என்கிறது உண்மை இல்லை."

     "என் அக்காவும் லவ் மேரேஜ் தான். எங்க அப்பா தொல்லை விட்டது என  கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு .எங்க அக்கா அடிக்கடி சொல்லுவா .காதல் பண்ணும் போது பார்த்த பார்வைக்கும், கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பார்த்த பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு  என்று.‌..கல்யாணத்துக்கு அப்புறம்  அந்த பார்வையிலே  காதலே பார்க்க முடியவில்லை,  என்று அடிக்கடி சொல்லுவா. இப்படித்தான் பல பேரோட வாழ்க்கை."

  உன் படிப்புல இப்போதைக்கு நீ கவனம் செலுத்து .காலம் எல்லாத்துக்கும் ஒரு தீர்வு கொடுக்கும்.   நாளைக்கு நான் உங்க அண்ணன் கூட பேசுறேன். சரியா திலகா.?

   இந்து திலகாவின் அண்ணனிடம்  பேசி,  திலகாவை  காலேஜுக்கு அனுப்ப சம்மதம் வாங்கினாள் . திலகாவிற்கு  தான் முழு பொறுப்பு எடுப்பதாக சொல்லி,  காலேஜுக்கு அனுப்ப  கேட்டுக் கொண்டதின் பேரில்,  திலகாவின் அண்ணனும் வேறிவழியின்றி ஒப்புக்கொண்டான்.

  திலகா படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினாள். கல்லூரிக்கு சென்று,  தோழிகளுடன் பேசியதில்,  அவள் கவலை மறந்து, சகஜ நிலைக்கு திருப்பினாள்.

     இந்நிலையில் சுந்தருக்கு  வங்கியில் நல்ல வேலை கிடைத்து விட்டது.  அண்ணனும் சற்று  மனம்மாறத் தொடங்கி இருந்தான் .  சுந்தரின் அம்மா முறையாக,  திலகாவின் அண்ணனிடம் வந்து  பெண் கேட்டார். கல்லூரி படிப்பு முடித்ததும் திருமணம் செய்வதாக திலகாவின் அண்ணன் ஒப்புக்கொண்ட நிலையில்,  திலகாவின் மனசு லேசானது. முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தினாள். பட்டம் பெற்றதும் திருமணம் என முடிவாயிற்று.

   கல்லூரி முடித்து ,அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்று முடிந்தது. ஆறு மாதம் கழித்து இந்து ... திலகாவை சந்தித்தாள். என்ன திலகா... லைப் எப்படி போயிட்டு இருக்கு.? 

     போய்கிட்டு இருக்கு இந்து. .நீ சொன்ன மாதிரி தான்.‌ பெருசா ஒன்னும் இல்ல.

 இந்த வாழ்க்கைக்கு தானா நான் என் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தேன் என நினைத்து, இப்போது  உண்மையில் வெட்கப்படுகிறேன் இந்து.

முற்றும்

✒️ஆக்கம் : @இரா. கலைச்செல்வி

சிறுகதை   #ருத்ர தாண்டவம் # : படைப்பு:இரா. கலைச்செல்வி                  —-------- (இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் நிலையினை  எடு...