வானொலி, நாளிதழ், மாத இதழ் , மின்னிதழ்கள், இணையதளம் ஆகிய வற்றில் பிரசுரமான எனது சிறுகதைகள் மற்றும் கவிதைகளை இதில் பதிவிடுகிறேன். படித்து தங்களின் பொன்னான கருத்தினை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் விமர்சனங்கள் எனது எழுத்துப் பணிக்கு மேலும் மெருகூட்டும் என நம்புகிறேன். வணக்கத்துடனும் 🙏நன்றிகளுடனும், உங்கள் இரா. கலைச்செல்வி .
திங்கள், 29 ஜூன், 2026
நவசமாஜ் மகளிர் மேடையின் சாதனை பெண் விருது வழங்கும் விழாவில் ஒரு விருது பெற்ற ஒரு மாணவியின் தந்தையின் கருத்து.
ஞாயிறு, 28 ஜூன், 2026
என் மனதை கசக்கிய மரணங்கள்.
என் மனதை கசக்கிய மரணங்கள்:
இந்திரா காந்தி ,ராஜீவ் காந்தி என்ற பெரிய ஆளுமைகளின் மரணத்தை தொடர்ந்து ,கொரோனா காலத்தில் நடிகர் விவேக், பாடகர் பாலசுப்ரமணியன் அவர்களின் மரணங்கள் நம்ப முடியாத அதிர்ச்சியும் வேதனையையும் அளித்தது.
அந்த வரிசையில் நடிகர் ,இயக்குனர், தயாரிப்பாளர் என்ற பன்முக ஆளுமை கொண்ட பாக்கியராஜ் அவர்களின் திடீர் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் தவிக்கிறது.
அவரின் பெருமைகளை பேசவோ அவர் நடிப்பின் திறமையை பாராட்டவோ எனக்குத் தகுதி இல்லை. எனக்கு அவரின் மனிதம் பிடிக்கும். அவரின் பேச்சு பிடிக்கும். அவரின் நகைச்சுவை பிடிக்கும். அவரின் அந்த சிரிப்பு பிடிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு நல்ல மனிதர் என்ற ரீதியில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவரின் மறைவை நம்ப மறுக்கிறது.
திரைப்படத் துறையில் நடிகர் சிவகுமாரை அடுத்து ஒரு நல்ல குடும்பத் தலைவன். அவரின் மனைவி நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் என் மனதை தொட்ட நடிகை. இந்தப் பெரும் இழப்பை தாங்கிக் கொள்கிற சக்தியை அவருக்கு இந்தப் பிரபஞ்சம் வழங்க வேண்டும்.
போன வாரம் எனக்கு அறம் விருதுகள் வழங்கப்பட்டபோது அவர் கையால் விருது வாங்குகிற அதிர்ஷ்டம் நமக்கு இல்லையே என்று பெரிதும் நினைத்தேன். ஏனெனில் கடந்த வருடம் அறம் விருதுகளை அவர்தான் வழங்கினார்.
கனத்த இதயத்துடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
எழுத்தாளர் இரா. கலைச் செல்வி
செவ்வாய், 9 ஜூன், 2026
தானத்தில் சிறந்த தானம்
ஞாயிறு, 7 ஜூன், 2026
அமெரிக்காவில் கல்யாணம்
#மௌனத்தின் மரணம்#
சிறுகதை #மௌனத்தின் மரணம் #
ஆக்கம் : எழுத்தாளர் இரா. கலைச்செல்வி
இருபது வருடங்களாக அண்ணன் மாணிக்கமும் , தம்பி முத்துவும் பேசிக் கொள்வதே இல்லை. அவர்களுக்கு இடையில் ஒரு பெரிய சுவர் இல்லாத மௌனம் நிலவிக் கொண்டிருந்தது. அன்று ஒரு சிறு பண விஷயத்தில் வந்த தவறான புரிதல், இருவர் மனங்களிலும் ஈகோவாக வளர்ந்து, பெரும் சுவராக நின்றிருந்தது. ஏதேனும் குடும்ப விழாக்களில் கலந்து கொண்டால் கூட, அவர்கள் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதைத் தவிர்த்து வந்தனர்.
அன்று முத்துவின் பேத்திக்கு முதல் பிறந்தநாள். விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்கள். தன் அண்ணன் மாணிக்கம் வரமாட்டார் என்று தெரிந்தும், முறைக்காக வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வைத்து விட்டு வந்தார். விழா மேடையில் முத்து தன் பேத்தியைக் கொஞ்சிக் கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலில் தன் அண்ணன் மாணிக்கம் வருவது தெரிந்தது.
கீழே இறங்கி தன் அண்ணனை வரவேற்க சென்ற முத்து, தன் அண்ணன் கூட்ட நெரிசலில் தடுமாறுவதை கண்டு , முத்து பதறி ஓடி போய் , அவரைத் தாங்கினான்.
மாணிக்கம் நிமிர்ந்து பார்த்தபோது தன் தம்பி முத்து. வயது முதிர்வால் கண்கள் சோர்வடைந்திருந்தன. தம்பியின் கைகள் அண்ணனை இறுகப் பற்றியிருந்தன. இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன.
"ஏன்டா முத்து... இன்னமும் என் மேலே கோவமா தான் இருக்கியா ?" என்ற மாணிக்கத்தின் குரல் தழுதழுத்தது.
" இல்லண்ணே. நான் உங்ககிட்ட பேசத்தான் ஆசைப்படுகிறேன். ஆனா நீங்க... என் முகத்தைக் கூட பார்ப்பதில்லை" என்று முத்துவும் தழுதழுத்த குரலில் இழுத்தான்.
அப்போதுதான் இருவருக்கும் புரிந்தது — இருவருமே ஒருவருக்கொருவர் பேசுவதற்கு மனதிற்குள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை. ஆனால் "யார் முதலில் பேசுவது?" என்கிற ஒற்றை ஈகோதான் இத்தனை ஆண்டுகளாக அவர்களின் இதயத்தை தின்று தீர்த்திருக்கிறது. யார் முதலில் பூனைக்கு மணி கட்டுவது என்று ரீதியில் ,இருவரும் மனதிற்குள்ளே வெதும்பி கொண்டிருந்தார்கள்.
மாணிக்கம் தன் மடியிலிருந்து ஒரு பழைய, நைந்துபோன டைரியை எடுத்தார். அதில் முத்துவின் சிறுவயது புகைப்படமும், அவன் விளையாட்டில் சாதித்த செய்தித்தாள் வெட்டுகளும் இருந்தன. அதைக் காட்டி "இது நினைவிருக்கா உனக்கு " என்று கேட்ட அந்த நொடி , முத்து நிலை குலைந்து போனான். "உன்மேல எனக்கு எப்பவும் கோவம் இருந்ததில்லையப்பா. ஆனால் ஏதோ ஒரு இது. என்னன்னு சொல்ல தெரியலப்பா. நீ சின்னவன் தானே இறங்கி வந்து பேச கூடாதா என்று நினைப்போ என்னவோ.! சின்ன வயசுல நாம எப்படி பேசி சிரிச்சு ஒன்னா இருந்தோம்." என்றார்.
முத்துவின் கண்கள் கலங்கின. வயசான மட்டும் ஏன் இப்படி சுயகௌரவம் வந்து மனதை ஆட்டி படைக்குதுன்னு தெரியல. இருபது வருட மௌனச் சுவர் ஒரு நொடிப் பார்வையில், ஒற்றைக் கட்டியணைப்பில் நொறுங்கிப் போனது. இருபது வருட மௌனம் அந்த ஒரு நொடியில் மரணித்துப் போனது.
உறவுகளின் புரிதலுக்குத் தேவை, நீண்ட வாதங்கள் அல்ல, "நான் இருக்கிறேன்" என்கின்ற ஒற்றை அன்பு கலந்த விட்டுக்கொடுத்தல் மட்டுமே!.
------
நவசமாஜ் மகளிர் மேடையின் சாதனை பெண் விருது வழங்கும் விழாவில் ஒரு விருது பெற்ற ஒரு மாணவியின் தந்தையின் கருத்து.
காலை வணக்கம் மேடம் 27/6/2026 வரலாற்று சிறப்புமிக்க அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் நவ சமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் மகளிர் மேடை சாதனை பெ...
-
#அம்மா என்ற ஜக்கம்மா # ( ஒரு பக்க கதை) படைப்பு : எழுத்தாளர் இரா. கலைச்செல்வி ******* அம்மா: பூஜை அறையில் நின்று க...
-
#சுதந்திர காற்று # (கலையின் ஹைக்கூ கவிதைகள்) படைப்பு கவிஞர் இரா .கலைச்செல்வி #எனது உயிர் மூச்சாய்.... சுதந்திர காற்று . சுகமாய் சுவாசிக்கி...
-
#தானத்தில் சிறந்த தானம்# ஆக்கம்: கவிஞர் இரா .கலைச்செல்வி ----- தானத்தில் சிறந்த சீர்மிகு தானம் இது . தன் உறுப்பைத் தந்த...