கவிதை : #விவசாயி #.
ஆக்கம் :கவிஞர் இரா. கலைச்செல்வி
*****
எனை படைத்தவன் இறைவன்... என்றால் ...!!!
எனக்கு உணவு படைப்பவன் நீயன்றோ,எனக்கு இறைவன்...!!!
உணவின்றி உயிர் வாழ முடியுமா..?உயிர் கொடுப்பவன் நீயே அன்றோ..!!!
உணவளிக்கும் உன் உழைப்பே ... உயர்ந்தது அன்றோ அனைத்திற்கும்..!!!
உன் நாட்டின் விடுதலைக்கு உழைத்தவர் மட்டும், தியாகி அல்ல.!!!
உலக மக்களின் உணவிற்காக உழைக்கும் நீயும் தியாகி தான்...!!!
உணவிற்காக ஊனினை உருக்கி... உழைக்கும் நீ ..!!!
உயிரை மய்த்துக் கொள்கிறாய்,
உன் வறுமையால்..!!!
உன்னை சுரண்டி தின்னும்..
.உன் முதலாளி மட்டும்...!!!
உல்லாச உலகில் ...
உற்சாகமாய்...வாழ்கிறான்...!!!
பணம் ஈட்டி வாழ , யாவர்க்கும் பல்லாயிரம் தொழில் உண்டு.!!! ஆனால்
பசிக்கின்ற வயிற்றுக்கு உணவளிக்க...
பவித்திரமான உன் தொழில் மட்டுமே.!!!
நீயோ...!!! உழைத்து.. உழைத்து...
நீர்த்து கருத்து கிடக்கிறாய்...!!!
நின் உழைப்பினை உறிஞ்சுவோன்...
நின்று ,தின்று, பருத்து, கிடக்கிறான்...!!!
மண்ணிலே போட்ட விதை...
மறுபிறப்பு எடுப்பது போல...!!!
உலகு உய்ய... உன் மறுபிறப்பு...
உலகிற்கு காலத்தின் கட்டாயம்..!!!
உன் வாழ்வில் வெற்றி முரசு கொட்டட்டும்.!!
உன் வீட்டில் மகிழ்ச்சி பொங்கட்டும்..!!
உன் குலம் செழித்து ஓங்கட்டும்.!!
உன்னை இவ்வுலகம் என்றென்றும் போற்றட்டும்.!!
ஆக்கம் : கவிஞர் இரா.கலைச் செல்வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக