வெள்ளி, 31 ஜனவரி, 2025

ஏன்..?எதனால்..??யாரால்..???

ஏன்..?? எதனால்..?? யாரால்..??


படைப்பு :

இரா. கலைச்செல்வி



அன்று ... எங்கு நோக்கினும்...

கருத்தடை மையங்கள்..!!!


இன்று ...எங்கு நோக்கினும்... 

கருத்தரிப்பு மையங்கள்..!!!



அன்று..

நாம் இருவர் ..!!! 

நமக்கு ஒருவர்..!!! என்ற

அரசு விளம்பரங்கள் எங்கும் ..!!


இன்று 

நாம் இருவர் ..!! 

நமக்கு எங்கே... ஒருவர்..?? என்ற 

தனியார் விளம்பரங்கள் எங்கும்.!!


 

அன்று...கருத்தடை மையங்களில், 

மக்கள் கூட்டம்...!!!

இன்று...கருத்தரிப்பு மையங்களில் ,

மக்கள் கூட்டம்...!!!



ஏன் ..?? எதனால்..?? யாரால்..??



உணவு பழக்க மாற்றம்..!!

உறங்கும் பழக்க மாற்றம்..!!

உடல் உழைப்பு இன்மை..!!


உலகம்  வெப்பமயமாதல்..!!

உணவில் இரசாயனக் கலவை.!!

உள்ளத்தின்  சோர்வு..!!


உன் வாழ்க்கை முறை..!!

உன் தாமதமான திருமணம்.!!! 

உடல் எடை அதிகரிப்பு..!!



இந்த மென்பொருள் யுகத்தில்,

இரவென்றும் பாராமல் ...


பணம் ஒன்றே குறிக்கோளாய்...

புரியாத இலக்கு  நோக்கி ..!!


ஏன்  என்றே தெரியாமல்..!!

எதற்கு என்றே புரியாமல்..!!


ஓடி ஓடி உழைத்தாயிற்று..!!

ஓய்ந்த போது மிஞ்சுவது ..!!


நம்  நற் சந்ததிகள் மட்டுமே..!!!

மழலைச் செல்வமே , மட்டற்ற செல்வம்..!!!

மழலையின்  மலர் சிரிப்பில் ..!!

மயங்காதோர் உண்டோ.??


படைப்பு:இரா.கலைச்செல்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அம்மா என்ற ஜக்கம்மா

#அம்மா என்ற ஜக்கம்மா # ( ஒரு பக்க கதை) படைப்பு : எழுத்தாளர் இரா. கலைச்செல்வி               ******* அம்மா:  பூஜை அறையில் நின்று க...