வெள்ளி, 31 ஜனவரி, 2025

ஏன்..?எதனால்..??யாரால்..???

ஏன்..?? எதனால்..?? யாரால்..??


படைப்பு :

இரா. கலைச்செல்வி



அன்று ... எங்கு நோக்கினும்...

கருத்தடை மையங்கள்..!!!


இன்று ...எங்கு நோக்கினும்... 

கருத்தரிப்பு மையங்கள்..!!!



அன்று..

நாம் இருவர் ..!!! 

நமக்கு ஒருவர்..!!! என்ற

அரசு விளம்பரங்கள் எங்கும் ..!!


இன்று 

நாம் இருவர் ..!! 

நமக்கு எங்கே... ஒருவர்..?? என்ற 

தனியார் விளம்பரங்கள் எங்கும்.!!


 

அன்று...கருத்தடை மையங்களில், 

மக்கள் கூட்டம்...!!!

இன்று...கருத்தரிப்பு மையங்களில் ,

மக்கள் கூட்டம்...!!!



ஏன் ..?? எதனால்..?? யாரால்..??



உணவு பழக்க மாற்றம்..!!

உறங்கும் பழக்க மாற்றம்..!!

உடல் உழைப்பு இன்மை..!!


உலகம்  வெப்பமயமாதல்..!!

உணவில் இரசாயனக் கலவை.!!

உள்ளத்தின்  சோர்வு..!!


உன் வாழ்க்கை முறை..!!

உன் தாமதமான திருமணம்.!!! 

உடல் எடை அதிகரிப்பு..!!



இந்த மென்பொருள் யுகத்தில்,

இரவென்றும் பாராமல் ...


பணம் ஒன்றே குறிக்கோளாய்...

புரியாத இலக்கு  நோக்கி ..!!


ஏன்  என்றே தெரியாமல்..!!

எதற்கு என்றே புரியாமல்..!!


ஓடி ஓடி உழைத்தாயிற்று..!!

ஓய்ந்த போது மிஞ்சுவது ..!!


நம்  நற் சந்ததிகள் மட்டுமே..!!!

மழலைச் செல்வமே , மட்டற்ற செல்வம்..!!!

மழலையின்  மலர் சிரிப்பில் ..!!

மயங்காதோர் உண்டோ.??


படைப்பு:இரா.கலைச்செல்வி.

புதன், 29 ஜனவரி, 2025

#காலத்தின் குரல்#

#காலத்தின் குரல்# (அன்றும்  இன்றும்)

கவிஞாயிறு  இரா. கலைச்செல்வி ,

                

         

                          @@@@@


காலத்தின் குரலினை  கூர்ந்து கேளுங்கள்..!!


முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்  அன்று.!!

முனிவர்களாய் முழுவேஷம் போடுவோர் இன்று..!!


மண்ணை  உரமாக்கும்  மண்புழுக்கள் அன்று..!!

மண்ணை  விஷமாக்கும்  நெகிழிகள் இன்று..!!


குடும்பத்தில் பத்துக்குமேல் குழந்தைகள் அன்று..!!

குடும்பத்தில் குழந்தைக்கே வழியில்லை இன்று..!!


எங்கும் கருத்தடை மையங்கள் அன்று ..!!

எங்கும்   கருத்தரிப்பு மையங்கள் இன்று..!!


தூயநீரும் ,  தூயகாற்றும் இலவசம் அன்று ..!!

இரண்டுக்கும் விலையோ விலை  இன்று.!!


இயற்கையில் விளைந்த காய்கறிகள்  அன்று..!!

இரசாயன  கலப்பினக்  காய்கறிகளே  இன்று...!!


தெருவிற்கு  ஒரு தொலைபேசி சாவடி அன்று ..!!.

ஒருவருக்கு ஒரு  அலைப்பேசி இன்று..!!


அன்றும்..இன்றும்.. இத்துணை மாற்றங்கள்..!!

ஆனால் இன்றும் , இவ்வுலகில்...


பெண் தெய்வமானாலும் அவள் கருவறையில்..!!

பெண்ணிற்கு பூசாரியாய் ஆள உரிமையுண்டோ..?


அன்றில் இருந்து  , இன்று வரை ,

"பரத்தையர் ,வேசி , விபச்சாரி..!! " என்ற,

பெண்பால் சொல்லுக்கு எதிர்ப்பாற்சொல் 

உலக அகராதியில் உண்டோ..?


அன்றில் இருந்து, இன்று வரை

"விதவை, வாழாவெட்டி , மலடி..!! "என்ற ,

பெண்ணைக் குறிக்கும் அகராதிச் சொற்கள் ..!!


நவீன யுகத்திலும்  "அறத்தமிழ் " அகராதியில் ,

நீக்கப்படாதது   ஏனோ..?


இந்த காலத்தின்  குரல்  கேட்கிறதா..??

இனி நல்லதே  நடக்கும் அன்றோ..!!

      

            ‌‌*****


கவிஞர் .இரா. கலைச்செல்வி, சென்னை.



#என்னுயிர் அம்மா#

கவிதை   #என்னுயிர் அம்மா#


எழுதியவர்: இரா. கலைச்செல்வி 



                   ***


உன் உயிர் கொடுத்து..!!

என் உயிர் தந்தவளே..!!


உன்   உதிரத்தை..!!

உணவாக்கி தந்தவளே..!!


உலகின் மிக சுகமான வீடு ..!!

உன் கருவறை மட்டுமே..!!!


உலகின் மிகப் பெரிய சக்தி..!!

உன் அன்பு மட்டுமே..!!!


உலகின் எந்த பரிசும்..!!

உன் ஆசை முத்தத்திற்கு ஈடாகுமோ..?


நான் மறக்கவே முடியாத ,

நான் பார்த்த முதல் ஓவியம் நீ..!!!

நான் கேட்ட முதல் இசை உன் குரல்..!!


என் நலம் விரும்பும் ,

என் ஒரே  ஜீவன்  நீயே..!!

எனைக் காத்த கடவுளும் நீயே..!!


நீ உடுத்திய  பருத்தி சேலையில்...!!

நீ எனக்கு கட்டிய தொட்டிலுக்கு..!!

நிகரான மாளிகை உண்டோ...?


உன் பருத்தி சேலை விரிப்பு மட்டுமே..!!

என் சுகமான பஞ்சு பெத்தை..!!


என் எல்லா கவலைகளும் ,

என்றும் பறந்து போகும்..!!


உன் சேலையை முகர்ந்து ,

உணர்ந்த அந்த நொடியில்..!!


நீ இவ்வுலகில் இல்லாத போது ,

என் ஒரே ஆறுதல்...!!!


நீ    விட்டுச் சென்ற  "அந்த"

உன்  சேலை மட்டுமே...!!!


உன் வாசம்..!! உன் உயிர்..!!

உன்  அந்த சேலைக்குள்ளே...!!


       இரா.கலைச்செல்வி.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

எங்கே போனாயோ..??

கவிதை : ‌ ஆக்கம் இரா. கலைச்செல்வி 

 எங்கே போனாயோ ?

           ***
அன்று,
வயலில் உழைத்து களைத்து ..!!
வந்து அமர்ந்த உழவனுக்கு ..!!

படர்ந்த புங்கமரத்தடியின் கீழ்..!! 
 பட்டப்பகல் உச்சி வெயிலில்..!!

கண்முன்னே கஞ்சிக் கலயம்..!!
கப கப பசியில் அதுவே தேவாமிர்தம்..!!

கடித்துக் கொள்ள  சிறுவெங்காயம் ..!!
ருசித்துக் கொள்ள மோர் மிளகாய் ..!!

உடல் உறுதியாய் இருந்தது. 
உடம்பினை நோயின்றி காத்தது.

இன்று,
அரை நூற்றாண்டுக்குப் பிறகு,
ஆஸ்பத்திரியில் நீ நுழைந்துள்ளாய். 

அழகிய ஐந்து நட்சத்திர ஹோட்டலின்,
அன்றாட  உணவு பட்டியலில் ,

முதலில் அமர்ந்துள்ள நீ..!!
மூத்த தமிழ்குடியின்  குடும்பங்களின்,

உணவு  பட்டியலில் இருந்து..
உயரே பறந்து எங்கே  போனாயோ..!!

வந்துவிடு .வந்துவிடு..!!
வாழ்வை வளமாக்க எங்களிடம் வந்துவிடு..!!



ஆக்கம் இரா. கலைச்செல்வி, சென்னை

ருத்ர தாண்டவம்

சிறுகதை   #ருத்ர தாண்டவம் # : படைப்பு:இரா. கலைச்செல்வி                  —-------- (இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் நிலையினை  எடு...